பட்டாசு பதாகை வெளியீடு கூட்டம்

சிவகாசி:சிவகாசி பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுபாட்டு அலுவலகத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் கோடவுன் பாதுகாப்பினை கடைபிடிப்பது பற்றிய பதாகை வெளியிடும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.பதாகையை வெளியிட்டு துணை முதன்மை வெடிபொருள் கடடுப்பாட்டு அதிகாரி சுந்தரேசன் பேசுகையில், ”கோடவுனை சுத்தமாகவும், துாய்மையாகவும் வைத்திருக்க வேண்டும். சுற்றி செடி, புதர்கள் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். மது அருந்தியோ, புகை பிடித்தோ, அலைபேசியில் பேசியப்படியோ பணி செய்ய கூடாது,”என்றார். டான்பாமா தலைவர் கணேசன், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment