ராஜபாளையத்தில் நெல் கொள்முதல்

ராஜபாளையம்:ராஜபாளையம் தென்காசி மெயின் ரோடு ஜெயராம் பஸ் ெஷட் அருகே அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம் அருகே சேத்துார் மற்றும் தேவதானம் பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் கொள்முதல் நடந்து வருகிறது. இதே போல் ராஜபாளையத்திலும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தப்பட்டது. அதன்படி கடந்த இரு நாட்களுக்கு முன் இப்பகுதியில் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரராஜா கூறுகையில், ”விவசாயிகளின் நீண்ட எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறி உள்ளது. சுற்றுப்பகுத விவசாயிகள் பயன்படுத்தி பலன் பெறலாம். ஒரு நாளில் குறிப்பிட்ட அளவு தான் என்ற வரைமுறை இல்லாமல் கொண்டு வரும் அனைத்தையும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும்,”என்றார்.

Related posts

Leave a Comment