ரோட்டில் திரிந்த மாடுகள் ‘அரெஸ்ட்’

சிவகாசி:சிவகாசி நகர் பகுதியில் ரோடுகளில் சுற்றி திரிந்த 20 மாடுகளை அலுவலர்கள் உதவியுடன் பிடித்த சப் கலெக்டர் அவற்றை கோசாலையில் ஒப்படைத்தார்.

சிவகாசியில் நகர் பகுதிகளில் ரோடுகளில் மாடுகள் அதிகளவில் நடமாடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தின. 3 மாதங்களுக்கு முன்பு சிவகாசி சப் கலெக்டர் தினேஷ்குமார் மாடுகளை கைப்பற்றி உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தார். இந்நிலையில் நேற்று ரோடுகளில் சுற்றிய 20 மாடுகளை சப் கலெக்டர் தலைமையில் கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்கள் கைப்பற்றினர்.

ஆனாலும் தினமும் ரோடுகளில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வாகனங்களில் செல்பவர்களுக்கு மாடுகள் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி கொண்டே உள்ளது.

கண்துடைப்பாக இல்லாமல் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சப் கலெக்டர் கூறுகையில், ”கைப்பற்றப்பட்ட மாடுகள் ஸ்ரீவில்லிபுத்துார் கோசலையில் ஒப்படைக்கப்படும். மாடுகளுக்கு உரிய அபராதத்தை செலுத்தி உறுதிமொழி எழுதி கொடுத்து மீட்டு கொள்ளலாம்.

மீட்கப்படாத மாடுகள் மதுரை அழகர்கோவில் கோசலையில் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் மாடுகளை திரும்ப பெற இயலாது,” என்றார்.

Related posts

Leave a Comment