ஸ்ரீவி.,நீதிமன்றத்தில் மகளிர் தினவிழா

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பெண் அலுவலர்கள், பெண்போலீசார்பங்கேற்ற மகளிர்தினவிழா போட்டிகள் நடந்தது.முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா தலைமை வகித்தார். அமர்வு நீதிபதிகள் சுமதிசாய்பிரியா, பரிமளா முன்னிலை வகித்தனர். தலைமை குற்றவியல் நீதிபதி சரண், சார்பு நீதிபதிகள் மாரியப்பன், சுந்தரி, உரிமையியல் நீதிபதி ஆனந்தி, நீதித்துறை நடுவர்கள் சந்திரகாசபூபதி, பரம்வீர் பங்கேற்றனர்.போட்டிகளில் வென்றவர்களுக்கு முதன்மை மாவட்டநீதிபதி முத்துசாரதா பரிசுகள் வழங்கினார். சட்டபணிகள் ஆணைக்குழு செயலர் மாரியப்பன் நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment