அலுவலகங்கள், பஸ்களில் கிருமிநீக்கம்

விருதுநகர்: விருதுநகரில் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், நகராட்சி அலுவலகம் என அனைத்து பகுதிகளிலும் நுழைவு வாயிலில் கிருமிநாசினியுடன் கை கழுவும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் கண்ணன் துவங்கி வைத்தார்.விருதுநகர் நகராட்சி சார்பில் சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில் பழைய பஸ் ஸ்டாண்டில் கை கழுவுதல் குறித்து மக்கள் மத்தியில் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பி.ஆர்.சி., டெப்போவில் மண்டல மேலாளர் சிவலிங்கம் தலைமையில் கொரோனா தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பஸ்கள், உணவகங்கள், அலுவலகங்கள், ஓய்வு அறையில் கிருமிநீக்கம் செய்யப்பட்டு வருகிறது.

Related posts

Leave a Comment