ஊரடங்கு நேரத்திலும் தடையில்லா கல்வி

சிவகாசி: கொரோனாவால் கடந்த மார்ச் 17 முதல் பள்ளி ,கல்லுாரிகள் இயங்கவில்லை. இச்சூழலில் மாணவர்களின் கல்வி தடைபடாத வகையில் சிவகாசி ஏ.ஏ.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் மூடுள், கூகுள் கிளாஸ்ரூம் செயலிகள் உதவியுடன் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றன. ஆசிரியர்களும் அசைன்ட்மென்ட், பாடக்குறிப்புகள் என அனைத்தையும் இதன் வாயிலாக வழங்கி வருகின்றனர். கூகுள் கிளாஸ்ரூம் பயன்பாட்டிற்காக கல்லுாரி நிர்வாகம் கூகுள் உடன் ஒப்பந்தம் செய்து ஜி-சூட் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையை கடந்த ஆண்டே அறிமுகப்படுத்தியது குறிப்பிடதக்கது. அதன்படி மாணவர்களுக்கு கூகுள் அக்கவுண்ட் வழங்கப்பட்டு 15 ஜி.பி., கிளவுட் ஸ்டோரேஜ் எனும் மேக கணினி சேமிப்பையும் வழங்கியது. ஆசிரியர்கள் தரும் பாடக்குறிப்புகள்,காணொளி காட்சிகளை இன்டர்நெட்டில் சேமிக்கப்பட்டு தேவையின்போது டவுன்லோட் செய்து கொள்ள வசதி உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. கல்லுாரி நேரத்தில் பயன்படுத்தப்பட்ட கால அட்டவணையே ஆன்லைன் வகுப்பிலும் பின்பற்றப்படுகிறது. இதனால் ஊரடங்கிலும் மாணவர்கள் இடையூறின்றி கல்வி கற்கின்றனர். இதோடு ஆன்லைனில் நடந்த இடைநிலை தேர்வை வீட்டிலிருந்தே எதிர்கொண்ட மாணவர்களுக்கு ஆசிரியர்களால் மதிப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.இறுதி தேர்விற்கு தயார்கல்லுாரிக்கு செல்லாவிட்டாலும் தடை இன்றி கல்வி கற்க இயல்கிறது. ஆசிரியர்கள் காணொளி காட்சி மூலம் பாடங்களை நடத்துகிறார்கள். எங்களது சந்தேகங்களுக்கு விடையளிக்க ஆசிரியருடனான கலந்துரையாடல்கள் பயனுள்ளதாக உள்ளது. இத்தகைய ஆன்லைன் வகுப்புகள் இறுதி தேர்விற்காக எங்களை தயார் செய்ய உதவியாக உள்ளது.அஜய் விஷால், இ.இ.இ., 3ம் ஆண்டு மாணவர்.நேர்முக தேர்வுக்கு உதவும்இறுதியாண்டு பயிலும் எனக்கு பிராஜெக்ட் வேலைகள் முடிவுற்ற நிலையில் திட்ட மாதிரியினை சோதிக்க ஜி-மீட் செயலி மூலம் துறை தலைவர், பேராசிரியர்கள் அடங்கிய குழு ரிவியூ நடத்தியது. இதன் மூலம் திட்ட மாதிரிகளை சிறப்புள்ளதாக மாற்ற விடுமுறை நாட்களை செலவழிக்க முடிகிறது. ஜி-மீட் செயலி ரிவியூ மீட்டிங் நேர்முகதேர்வுக்கு உதவியாக உள்ளது.மஞ்சுளா, சி.எஸ்.இ., 4ம் ஆண்டு மாணவி.தடையின்றி தொடர்கிறோம்ஊரடங்கால் கல்லுாரி நுாலகம் செல்ல இயலாமல் போனது. ஆனால் கூகுள் கிளாஸ் ரூம் மூலமாக அனைத்து பாடங்களுக்கும் தலைப்பு வாரியாக பாட குறிப்புகள் வந்து சேர்ந்தது. இதனால் கல்வியினை எந்த தடையுமின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறோம். ஆன்லைன் கருத்தரங்கு,பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று சிறப்பாக கல்வி கற்கிறோம்.குணசீலன், மெக்கானிக்கல், 4ம் ஆண்டு மாணவர்.போயே போச்சு அச்சம்ஊரடங்கால் மகளின் கல்வி தடைபடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் கல்லுாரி ஆன்லைன் வகுப்புகள் மகளின் கல்விக்கு உதவுகிறது. தினமும் பாட குறிப்புகள் கல்லுாரி நேரத்திலே அந்தந்த ஆசிரியர்களால் வழங்கப்பட்டு தேர்வுகளும் நடத்தப்படுகிறது. அச்சமும் போய்விட்டது. வசதியை ஏற்படுத்தி தந்த கல்லுாரி நிர்வாகத்துக்கு நன்றி.கோபால், பெற்றோர்.

Related posts

Leave a Comment