களப்பணியாளர்களுக்கு வழங்கல உபகரணங்கள்

விருதுநகர்; மாவட்டத்தில் கொரோனா களப்பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததற்கு அரசு அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வேதனை தெரிவித்துள்ளது.இக் குழு மாநில உறுப்பினர் வைரவன் கூறியதாவது: மாவட்டத்தில் சுகாதாரத்துறை ஊழியர்கள் 300க்கு மேற்பட்டோர் கொரோனா களப்பணியில் உள்ளனர். இவர்களுக்கு முறையா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை. சானிடைஸர், தொற்றை தடுக்கும் என் 95 மாஸ்க்குகள் கூட வழங்கவில்லை. சளி மாதிரிகளை கொண்டு செல்வோருக்கு பாதுகாப்பு கவச உடை இல்லை. இவர்களின் பாதுகாப்பதில் மாவட்ட நிர்வாகம் போதிய கவனம் செலுத்தவில்லை. இதனாலயே ஸ்ரீவி., சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அரசு அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கடும் எதிர்ப்பை தெரவிக்கிறோம் ,என்றார்.

Related posts

Leave a Comment