கொரோனாவுக்கு எதிராக போரிடுபவர்களுக்கு தேசம் தலைவணங்குகிறது: பிரதமர்

புதுடில்லி: கொரோனா வைரசை எதிர்த்து போரிடும் சுகாதாரம், மருத்துவம் மற்றும் போராடும் கதாநாயகர்களுக்கு தேசம் தலைவணங்குகிறது என பிரதமர் மோடி கூறினார்.

‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது :

இந்தியாவில், கொரோனாவுக்கு எதிரான போரை மக்கள் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில், மக்களும், அரசும் இணைந்து செயல்படுகின்றன. இந்த போரில், குடிமக்கள் அனைவரும் போர் வீரர்கள் போல் செயல்படுகின்றனர். தொற்றுநோயை எதிர்த்து, மக்கள் போராடுவதை நாம் கிராமங்களிலும், நகரங்களிலும் பார்க்க முடியும். இந்த போராட்டத்தில், ஏழைகளுக்கு சிலர் உணவு வழங்குகின்றனர். சிலர், நிலத்தை விற்று உதவுகின்றனர். இன்னும் சிலர், பென்சனை அளித்துள்ளனர்.

யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதை நமது விவசாயிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில், ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். சிலர், வாடகையை தள்ளுபடி செய்துவிட்டனர். பள்ளிகளில் தங்கியுள்ள தொழிலாளர்கள், அந்த பள்ளியில் தூய்மைபடுத்தியுள்ளனர். இன்னும் சிலர் மாஸ்க்குகள் தயாரித்து கொடுக்கின்றனர். நாடு சரியான பாதையில் செல்கிறது.

கொரோனாவிற்கு எதிரான போர் நம்மை ஒற்றுமைப்படுத்தியுள்ளது. தேவைப்படுவோருக்கு உதவி செய்ய தயாராக உள்ளது. தற்போது, எதிர்மறையான எண்ணங்களை கைவிட வேண்டும். டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது மிகவும் கண்டனத்திற்குரியது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது மிகவும் முக்கியம்
கொரோனாவுக்கு எதிராக போராடும் நாயகர்களுக்கு நாடு வணங்குகிறது. சுகாதார பணியாளர்களின் பணி போற்றுதலுக்கு உரியது. தூய்மை பணியாளர்களின் சேவையை தற்போது அனைவரும் உணர்கின்றனர். போலீசார் உதவி செய்வதை நாம் பார்க்கிறோம்.போலீசாரின் பணியும் பாராட்டுக்குரியது கொரோனாவிற்கு எதிரான போரில், அனைத்து மாநிலங்களின் பங்கு முக்கியமானது. கொரோனாவை எதிர்த்து போரிடும் மாநில அரசுகளை பாராட்டுகிறேன்.

கொரோனாவுக்கு எதிரான போரில், உலக நாடுகளுக்கு இந்தியா உதவியுள்ளது. சுயநலம் பார்க்காமல் இந்தியா செயல்பட்டுள்ளது. இந்தியாவின் சக்தியை இன்னும் சிலர் உணரவில்லை. உலக நாடுகள், நம்மை பாராட்டியதை அவர்கள் குறைத்து மதிப்பீடுகின்றனர். ஒரு விஷயத்தை உலகம் ஒப்பு கொண்ட பின்னர் தான் நாம் ஒப்பு கொள்கிறோம். ஆயுர்வேதத்தின் மகிமையை குறைத்து மதிப்பிடக்கூடாது.

சமூக பார்வை தற்போது மாற்றமடைந்துள்ளது. கொரோனாவில் இருந்து தப்பிக்க மாஸ்க் அணிவது கட்டாயம். இனிமேல், மாஸ்க் குறித்த நமது பார்வை நிச்சயம் மாறும் சாலைகளில் எச்சில் துப்புவதை பாவம் என மக்கள் நினைக்க துவங்கி விட்டனர். இதனால், சாலைகளில் எச்சில் துப்புவது உள்ளிட்ட தீய பழக்கங்களை கைவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. சமூக விலகல் தற்போது முக்கியம்.

அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து ஒரே அணியாக செயல்படுகின்றன. அனைத்து துறைகளும் தொழில்நுட்பத்தை ஏற்க துவங்கிவிட்டன. உடான் விமான சேவை மூலம் 500 டன் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. உலகம் மற்றும் இந்தியாவில் நடக்கும் திருவிழாக்களில், கொரோனா ஏற்படுத்திய மாற்றத்தை அனைவரும் பார்த்தோம். இந்தியா முன்னேறி வருகிறது. தற்போது, பொறுமையுடனும், ஒற்றுமையுடனும் இருப்பது அவசியம்.
கொரோனாவை எதிர்த்து போரிடும் வீரர்களுடன் அனைவரும் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு, அனைவரும் தேசத்திற்கு பாபுட வேண்டும். அத்யாவசிய சேவைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த மன் கி பாத் நிகழ்ச்சி வருவதற்குள், உலகம் கொரோனாவில் இருந்து விடுபடும் என நம்புகிறேன்.இவ்வாறு பிரதமர் பேசினார்.

Related posts

Leave a Comment