கேப்டன் பதவியில விராட் கோலி இன்னும் திறமையை வளர்த்துக்கனும்… ஆஷிஷ் நெஹ்ரா

டெல்லி : தோனிக்கு மாற்றாக கருதப்பட்ட ரிஷப் பந்த்திற்கு அளவிற்கு அதிகமாகவே வாய்ப்புகள் வழங்கப்பட்டு விட்டதாகவும் அதை பயன்படுத்திக் கொள்ள அவர் தவறியதாகவும் முன்னாள் பௌலர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். ஆனால் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை கே.எல். ராகுல் மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டு இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஒரு வீரராக விராட் கோலியின் திறமை ஆச்சர்யத்திற்குரியது என்று தெரிவித்துள்ள நெஹ்ரா, ஆனால் ஒரு கேப்டனாக அவர் இன்னும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது என்றும், அவர் அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரிஷப் குறித்து நெஹ்ரா முன்னாள் பௌலர் ஆஷிஷ் நெஹ்ரா இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகள், 120 ஒருநாள் போட்டிகள் மற்றும் 27 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். உலக கோப்பை தொடரில் விளையாடியுள்ள மிகச்சிறந்த பௌலர்களின் ஒருவராக நெஹ்ரா சாதனை புரிந்துள்ளார். இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ராவின் ஆகாஷ்வாணி ஷோவிற்காக பேசிய நெஹ்ரா இந்திய அணி குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

நெஹ்ரா அறிவுறுத்தல் கேப்டன் விராட் கோலி குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நெஹ்ரா, ஒரு வீரராக அவரது சாதனைகள் மிகவும் வியப்பிற்குரியது என்றும் ஆனால் ஒரு கேப்டனாக அவர் தனது திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்வது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் எளிதில் உணர்ச்சி வசப்படுவதாகவும், அதை தவிர்ப்பது சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர கிடப்புல போடணும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனிக்கு மாற்றாக பார்க்கப்பட்ட ரிஷப் பந்த்திற்கு அதிகப்படியான வாய்ப்புகள் வழங்கப்பட்டு விட்டதாகவும் அதனால் அவரை கிடப்பில் போடலாம் என்றும் நெஹ்ரா தெரிவித்துள்ளார். அவருக்கு சிறிய வயதுதான் என்பதால் இன்னும் சில ஆண்டுகள் கழித்து அவர் சிறப்பாக விளையாட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.

நெஹ்ரா பாராட்டு ரிஷப் பந்த் தன்னுடைய இடத்தை கே.எல். ராகுலிடம் இழந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரிஷப் பந்த் நிலையாக விளையாடாததால், அந்த பொறுப்பை இந்திய நிர்வாகம் கே.எல் ராகுலிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அவர் 5வது இடத்தில் மிகவும் சிறப்பாக விளையாடி வருவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment