3 நாளில் பணியில் சேர 2,570 நர்ஸ்கள் நியமனம் ; இபிஎஸ் உத்தரவு

சென்னை : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, 2,570 ஒப்பந்த செவிலியர்களை பணியமர்த்த, முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

மூன்று நாட்களில் பணியில் சேரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பணியாளர்கள் தேர்வு வாரியம் சார்பில், ஏற்கனவே, 530 டாக்டர்கள், 2,323 செவிலியர்கள், 1,508 ஆய்வக பணியாளர்கள், 278 சுகாதார ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டு, பணியாற்றி வருகின்றனர்.அதைத் தொடர்ந்து, ஆறு மாதங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில், மேலும், 2,570 செவிலியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.

அவர்கள், நியமன ஆணை கிடைக்க பெற்ற, மூன்று நாட்களுக்குள், பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு, தலா, 40 செவிலியர்கள், தாலுகா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப, 10 முதல், 30 செவிலியர்கள் பணியமர்த்தப்படுவர்.இதனால், கொரோனா தடுப்பு பணிகள், மேலும் வலுவடையும் என, முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment