சந்தை அமைப்பு பணி முதல்வர் ஆலோசனை

சென்னை : சென்னையை அடுத்த திருமழிசையில், தற்காலிக மொத்த காய்கறி சந்தை அமைக்கப்படுவது குறித்து, அதிகாரிகளுடன், முதல்வர், இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பரவலுக்கு வழிவகுத்ததால், சென்னை, கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. திருமழிசையில், தற்காலிக மொத்த காய்கறி சந்தை, அரசு சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.தலைமை செயலகத்தில், முதல்வர், இ.பி.எஸ்., நேற்று ஆலோசனை நடத்தினார். அதில், தலைமை செயலர் சண்முகம், டி.ஜி.பி., திரிபாதி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர், கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர். தற்காலிக சந்தையில், நோய் பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க, முதல்வர் அறிவுறுத்தினார். தற்காலிக சந்தை, நாளை முதல் செயல்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. துறை அமைச்சரான, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தேனி சென்றிருப்பதால், நேற்றைய கூட்டத்தில், அவர் பங்கேற்கவில்லை. தற்காலிக சந்தையை முதல்வரும், துணை முதல்வரும், இன்று நேரில் பார்வையிட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment