சீரமைக்கப்படாத சுற்றுச்சுவர்; பாதுகாப்பில்லாத சித்தா பிரிவு

விருதுநகர் : விருதுநகரில் சீரமைக்கப்படாத சுற்றுச்சுவரால் சித்தா மருத்துவ பிரிவு பாதுகாப்பின்றி காணப்படுகிறது.

அரசு மருத்துவமனையில் செயல்படும் இப்பிரிவு பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் காணப்படுகிறது. கட்டடங்கள் சிதிலமடைந்தும், வளாகங்கள் புதர்மண்டியும் காணப்படுகின்றன. சுற்றுச்சுவர் சேதமுற்றுள்ளதால் இவ்வழியைதான் பலரும் பயன்படுத்துகின்றனர். இரவில் இப்பகுதியில் விளக்கு வசதி இல்லாததால் இதன் வழியே சமூகவிரோதிகளும் வந்து செல்வதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறுகின்றனர். இதனால் நோயாளிகளுக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருதி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்.

Related posts

Leave a Comment