சுகாதார வளாகத்துக்கு பூட்டு; திறந்த வெளியை நாடும் அவலம்

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி வனமூர்த்திலிங்கம் பிள்ளை தெரு பெண்கள் கழிப்பறை குறிப்பிட்ட நேரம் மட்டும் செயல்படுவதோடு மீதி நேரம் பூட்டப்படுவதால் இப்பகுதி பெண்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.அப்பகுதி மணிகண்டன்:போர்வெல் குழாயில் தண்ணீர் இல்லாததால் பூட்டியதாக கூறுகின்றனர். கடந்த முறை இதே பிரச்னைக்கு வெளியிலிருந்து தண்ணீர் விலைக்கு வாங்கியதால் கட்டணத்தை உயர்த்தினர்.தற்போது ஒரு வாரமாக பூட்டியது முறையற்ற செயல். இதனால் திறந்த வெளி கழிப்பிடத்திற்கு பேரூராட்சியே துணை போகும் நிலை உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,என்றார்.

Related posts

Leave a Comment