மனவளர்ச்சி குன்றியோர்-முதியோர்களுக்கு உணவு, உடைகள்: அமைச்சர் வழங்கினார்

சிவகாசியில் ஆதரவற்ற முதியோர்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உணவு மற்றும் உடைகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிற்கிணங்க விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக மாவட்டம் முழுவதிலும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி நிவாரண பொருட்களை நேரடியாக பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றார். சிவகாசியில் ஆதரவற்ற முதியோர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அறுசுவை அசைவ உணவு மற்றும் உடைகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

சிவகாசி அருகே ஜீவக்கல் ஆதரவற்றோர் ஆசிரமத்தில் உள்ள மனநலம் குன்றியவர்கள், ஆதரவற்ற முதியவர்கள் 50 பேருக்கு தலா 2 புதிய உடைகள் மற்றும் அறுசுவையுடன் மதிய உணவு பணியாளர்களுக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மாவட்ட கலெக்டர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு புத்தாடை மற்றும் மதிய உணவு வழங்கினர். அதைத்தொடர்ந்து சிவகாசி அருகே சாட்சியத்தில் சி.எஸ்.ஐ. மனவளர்ச்சி குறையுடையோர் பள்ளியில் ஆதரவற்றோர், மனநலம் குன்றியவர்கள் உட்பட 32 பேருக்கு புதிய ஆடைகள் மற்றும் மதிய உணவுகளை வழங்கினார். ஆதரவற்றோர் இல்லங்களில் அவர்கள் தங்கியிருக்கும் நபர்கள் குறித்தும் மனநிலை பாதிக்கப்பட்டு தங்கியிருக்கும் நபர்கள் குறித்தும் பராமரிப்பு குறித்தும் அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தனர்.

நிகழ்ச்சியில் சப்-கலெக் டர் தினேஷ்குமார், தாசில்தார் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் பலராம், வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன் சக்திவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment