புதிய பணியிடம், அரசு நிதியில் வெளிநாட்டு டூர், விருது நிகழ்ச்சி..அத்தனைக்கும் தமிழக அரசு தடாலடி தடா

சென்னை: கொரோனா லாக்டவுனால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரிகட்டும் வகையில் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கு தடை உள்ளிட்ட அதிரடி சிக்கன நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு சிக்கன நடவடிக்கைகளுக்காக அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

புதிய ப ணியிடங்களை உருவாக்கி நியமனம் செய்யக் கூடாது

ஏற்கனவே உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தடை இல்லை

அரசின் மொத்த செலவில் 20%-த்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அரசு நடத்தும் விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவு பரிசுகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

விமானங்களில் உயர் வகுப்பில் அரசு அதிகாரிகள் பயணிக்க அனுமதி இல்லை.

பிற மாநிலங்களுக்கு விமானத்தில் சென்றாலும் ரயில் கட்டணம்தான் வழங்கப்படும்.

அரசு செலவில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள அனுமதி கிடையாது.

அரசின் விளம்பர செலவுகளில் 25% குறைக்க வேண்டும்.

அலுவலக உபகரணங்கள் கொள்முதலில் 50% வரை குறைப்பு தேவை.

அரசு பணத்திலான அனைத்து விருந்துகளும் இனி கிடையஅது.

சுகாதாரம், தீயணைப்பு துறைகளுக்கு மட்டும் உபகரண கொள்முதலுக்கு அனுமதி

Related posts

Leave a Comment