3 மாதம் கழித்து இந்தியா வரும் விஸ்வநாதன் ஆனந்த்.. சென்னை வருவதில் சிக்கல்

சென்னை : விஸ்வநாதன் ஆனந்த் கடந்த 3 மாதங்களாக கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக ஜெர்மனியில் சிக்கி இருந்தார். அவர் தற்போது இந்தியா வர உள்ளார்.

ஜெர்மனியில் பன்டேஸ்லிகா செஸ் தொடரில் பங்கேற்க சென்ற அவர் இந்தியாவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அங்கேயே சிக்கினார்.

மேலும் ஜெர்மனியில் அப்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தியா, ஜெர்மனி இரண்டு நாடுகளிலும் விமான பயணத்திற்கு கடும் கட்டுப்பாடு இருந்தது.

அதனால், விஸ்வநாதன் ஆனந்த் ஜெர்மனியில் தனியாக ஒரு அபார்ட்மெண்ட்டில் தங்கி இருந்தார்.

Related posts

Leave a Comment