இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி

பொருளாதாரத்தின் மிகப்பெரிய பகுதி திறக்கப்பட்டுள்ளதால் இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பொருளாதாரம் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கான மிகப்பெரிய பகுதி திறக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில் ‘‘நான் கடந்த முறை பேசியபோது பயணிகள், விமான போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது மிகவும் முன்னெச்சரிக்கையுடன் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. தொழில்துறையும் மிகப்பெரிய அளவில் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் நாம் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் நாம் அஜாக்கிரதையாக இருந்து விடக்கூடாது. நாம் தொடர்ந்து சமூக இடைவெளி, மற்ற வழிமுறைகளை மிகவும் தீவிரமாக தற்போது கடைபிடிக்க வேண்டும்.

இந்தியா ஏராளமான சவால்களை சந்தித்து வருகிறது. ஆயினும், குறைந்த மக்கள்தொகை கொண்ட மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனா வைரஸைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது’’ என்றார்.

Related posts

Leave a Comment