திருச்சி அருகே சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

திருச்சி அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள்

பூவாங்குடி:

திருச்சி பூவாங்குடி காலனியில் வசித்து வருபவர் ஆசிரியை கௌரி.  ஆசிரியை கௌரிக்கு இரண்டு மகள்கள் மற்றும்  ஒரு மகன்  உள்ளனர்.  இந்நிலையில் ஆசிரியை கௌரி மற்றும் மகன், மகள்கள் வீட்டில் வசித்து வந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆசிரியை கௌரி, இரண்டு மகள்கள் மற்றும்  ஒரு மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

சிலிண்டர் வெடிப்புக்கான காரணம் குறித்து சம்பவ இடத்தில் நவல்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி பூவாங்குடி காலனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை கவலை அடைய செய்துள்ளது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

Leave a Comment