தமிழகத்தில் ரயில் போக்குவரத்து தொடக்கம்.. ரயிலில் செல்ல இ பாஸ் கட்டாயம்

சென்னை: தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளே சிறப்பு ரயில் போக்குவரத்து தொடங்கியது. இதில் பயணம் செய்யும் மக்களுக்கு இ பாஸ் கட்டாயம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடங்கிய போக்குவரத்து..தகவல்கள் தமிழகத்திற்கு உள்ளே 4 வழித்தடங்களில் பயணிகள் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே துறை முடிவு எடுத்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. திருச்சி – நாகர்கோவில், கோவை – காட்பாடி, கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் போக்குவரத்து தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளே சிறப்பு ரயிலில் பயணம் செய்யும் மக்களுக்கு இ – பாஸ் கட்டாயம் என்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ரயில் சேவை நாளையில் இருந்து துவங்குகிறது. அதாவது மண்டலம் விட்டு மண்டலம் செல்ல ரயில்களில் பயணிப்பதற்கு இ-பாஸ் கட்டாயம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, தமிழகம் 8 மண்டலமாக பிரிக்கப்பட்டது . தமிழகத்தில் மண்டலங்களுக்கு உள்ளே பேருந்தில் செல்ல பாஸ் தேவை இல்லை என்று இன்றுதான் அறிவிக்கப்பட்டது. அதேபோல் மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய இ பாஸ் தேவை இல்லை. இதில் மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம் என்று நேற்றுதான் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழக அரசு பயணிகளுக்கு ரயிலில் செல்ல இ பாஸ் பெறுவதற்கான வசதியை இணையத்தில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ரயிலில் செல்வோர் இ பாஸ் பெற https://tnepass.tnega.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

Related posts

Leave a Comment