ஆஃபிஸ் பாய் டு பாக்ஸ் ஆஃபிஸ் இயக்குநர்.. ’பசங்க’ பாண்டிராஜுக்கு பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை: இயக்குநர் பாக்யராஜ் அலுவலகத்தில் ஆஃபிஸ் பாயாக தனது பயணத்தை தொடங்கிய நம்ம ‘பசங்க’ படத்தின் இயக்குநர் பாண்டிராஜின் 44வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று ஊரை விட்டு கோடம்பாக்கத்திற்கு கிளம்பிய ஆட்களில் இவரும் ஒருவர்.

பல கட்ட போராட்டங்களை சந்தித்த பின்னர், 2009ம் ஆண்டு இவர் இயக்கிய முதல் படமான ‘பசங்க’ 2 தேசிய விருதுகளை குவித்து சாதனை படைத்தது.

சேரன், தங்கர்பச்சான், சிம்புதேவன் இயக்குநர் பாக்யராஜ் அலுவலகத்தில் ஆஃபிஸ் பாயாக பணிபுரிந்த பாண்டிராஜ், தனது விடா முயற்சியால், இயக்குநர்கள் சேரன், தங்கர்பச்சான் மற்றும் சிம்புதேவன் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து, சினிமாவை நன்கு கற்றுக் கொண்டு, தனக்கான நேரத்திற்காக காத்திருந்து ‘பசங்க’ படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார்.

வெற்றிமேல் வெற்றி பசங்க படத்தை தொடர்ந்து வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, இது நம்ம ஆளு, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை என இவர் இயக்கிய அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக இவரை மாற்றியது.

தளபதிக்கு ஒரு கமர்ஷியல் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படமும், அதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படமும் பாண்டிராஜ் இயக்கத்தில் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. இந்நிலையில், தளபதி விஜய்க்கு ஒரு பக்கா கமர்ஷியல் படத்தை இவர் இயக்கப் போவதாக சமீபத்தில் பரவலாக தகவல்களும் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

என் இயக்குநர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமான மெரினா, ஹீரோவாக வளர்ந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, சூப்பர் ஹீரோவாக பாசமான அண்ணனாக மாறீய நம்ம வீட்டு பிள்ளை என சிவகார்த்திகேயன் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய இயக்குநர் பாண்டிராஜின் பிறந்தநாளை முன்னிட்டு, தற்பொது, என் இயக்குநருக்கு பிறந்தநாள், இன்னும் சூப்பரா பல படங்கள் பண்ண வாழ்த்துக்கள் என வாழ்த்தியுள்ளார்.

விஷ்ணு விஷால் வாழ்த்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் இதுவரை நடிக்கவில்லை என்றாலும், அவரது இயக்கத்திற்கு மரியாதை அளித்து, நடிகர் விஷ்ணு விஷால் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை பாண்டிராஜுக்கு தெரிவித்துள்ளார். வரும் ஆண்டு மேலும், வெற்றி படங்களை இயக்க வாழ்த்துக்கள் சார் என விஷ்ணு விஷால் குறிப்பிட்டுள்ளார்.

மாஸ் மாஷப் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கிய நம்ம வீட்டுப் பிள்ளை பட்டி தொட்டி எங்கும் எக்கச்சக்க கலெக்‌ஷனை அள்ளி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், பாண்டிராஜ் இயக்கிய படங்களையும், மேக்கிங் வீடியோக்களை வைத்தும் ஒரு மிரட்டலான பர்த்டே மாஷப்பை செய்து போட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறது

Related posts

Leave a Comment