நுண்ணீர் பாசன திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறலாம்- அதிகாரி தகவல்

நுண்ணீர் பாசன திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறலாம் என்று வெம்பக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தாயில்பட்டி:

வெம்பக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் கார்த்திகா செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வெம்பக்கோட்டை வட்டாரத்தில் நடப்பு ஆண்டு பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு வருகிறது.

நுண்ணீர்பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல், போட்டோ, கணினி சிட்டா, பயிர் அடங்கல், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, நில வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை முடிவு ஆகியவற்றை கொடுக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, சுப்பிரமணியபுரம், சங்கரபாண்டியபுரம், ஆலங்குளம், எதிர்க்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது வெம்பக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment