முக கவசம் அணியாத 1,367 பேர் மீது வழக்கு

சிவகாசி டவுன், சிவகாசி கிழக்கு, மாரனேரி, திருத்தங்கல், எம்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் முக கவசம் அணியாமல் வெளியே சென்ற 1,367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சிவகாசி:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அணியாமல் வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவின் பேரில் சிவகாசி டவுன், சிவகாசி கிழக்கு, மாரனேரி, திருத்தங்கல், எம்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் முக கவசம் அணியாமல் வெளியே சென்ற 1,367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related posts

Leave a Comment