தேவை புதியன:முறிந்து விழும் நிலையில் மின் கம்பங்கள் : சிமெண்ட் காரைகள் பெயர்வதால் விபத்து

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.இது போன்ற கம்பங்களை புதியதாக மாற்ற மின் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டதில் நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் மின் கம்பங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இவை அமைக்கப்பட்டு பல ஆகி விட்ட நிலையில் சேதமடைந்து, சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளன. கிராமங்களில் விழும் நிலையில் ஏராளமான மின் கம்பங்கள் உள்ளன. இவற்றை மாற்ற கோரி பலமுறை முறையிட்டும் மின் வாரியம் கண்டு கொள்வதில்லை.

அருப்புக்கோட்டை நகரில் உள்ள மின்கம்பங்கள் பல சேதமடைந்து உள்ளன. இதன் கீழ் பகுதி, மேல் பகுதி உருக்குலைந்து உள்ளது. காற்றின் வேகத்தில் கம்பத்தின் மேல் பகுதி சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. பொதுமக்கள் மீது விழுந்து விபத்தையும் ஏற்படுத்துகின்றன.

சொக்கலிங்கபுரம் அப்பாசாமி தெருவில் ஒரு மின் கம்பம் வீட்டின் மேல் சாய்ந்து கிடக்கிறது. இது தொடர்பாக நான்க மாதங்களாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் மக்கள். இதேபோல் ஆத்திப்பட்டி ஊராட்சி ஜெயராம் நகரில் ஒரே தெருவில் மின்கம்பங்கள் பல காரைகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. இத்தெருவில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

புதியதாக மாற்றலாமே

அருப்புக்கோட்டையில் பல தெருக்களில் உள்ள மின் கம்பங்கள் விழும் நிலையில் உள்ளன. இவற்றை புதியதாக மாற்ற மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த மின் கம்பங்கள் குறித்து மின்வாரிய அலுவலகத்தில் புகார் கொடுத்து பொதுமக்கள் அலுத்து விட்டனர்.

தவமணி, தனியார் ஊழியர் , அருப்புக்கோட்டை.

Related posts

Leave a Comment