அன்று தொழிலாளி இன்று முதலாளி சுய தொழிலில் சாதிக்கும் இன்ஜினியர்

காரியாபட்டி:வேலை இல்லாத இளைஞரை தொழில் முனைவோராக்க அரசு மானியம் வழங்கி ஊக்குவித்து வருகிறது. அந்தவகையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த காரியாபட்டி அருகே உலக்குடியை சேர்ந்த இன்ஜினியர் ராமச்சந்திரன் 10 பேருக்கு வேலை வழங்கும் வகையில் தனியாக தொழில் தொடங்கி தனது கனவை நிறைவேற்றி உள்ளார். 

இவர் காரியாபட்டியில் மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வரும் இவர் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக திகழ்கிறார். 

ராமச்சந்திரன் கூறியதாவது: தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். சுயதொழில் செய்து பலருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் வெளியேறினேன். என்ன தொழில் செய்யலாம் என யோசித்தபோது தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு அத்தியாவசிய பொருள் தொழில் செய்ய எண்ணினேன். அதன்படி அரசு மானியத்தில் லோன் வாங்கி மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து 300, 500 எம்.எல்., 1,2, 20 லிட்டர் என ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற்று விற்பனை செய்து வருகிறேன். விசேஷங்களுக்கு ஆர்டரின் பேரில் சப்ளை செய்கிறேன். சொந்த தொழில் செய்கிறோம் என்கிற நிம்மதியோடு உள்ளேன்,என்றார்.

Related posts

Leave a Comment