முகாம்களில் நெருக்கடி: தவிக்கும் அதிகாரிகள்

ஸ்ரீவில்லிபுத்துார்:தனிமை முகாம்களில் வீடுகளை போல் வசதிகளை எதிர்பார்ப்பதாலும், அதிகளவில் தனிமைபடுத்துபவர்களை தங்க வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்னை செய்வதாலும் அவர்களை சமாளிக்க முடியாமல் வருவாய்த்துறையினர் தவிக்கின்றனர்.

கொரோனா பரவ லால் விருதுநகர் மாவட்டம் வரும்இவர்களை மாவட்ட எல்லையில் தடுத்து தனிமை முகாம்களுக்கு அனுப்புகின்றனர். இங்கு சாதாரணமானவர்களை சமாளிக்கும் துறை அதிகாரிகள் வசதி உள்ளவர்களை சமாளிப்பதில் சிரமம் கொள்கின்றனர். ‘ஏசி’ மற்றும் கழிப்பறையுடன் கூடிய தனிஅறை, ஓட்டல் சாப்பாடு கேட்டு வாக்குவாதம் செய்கின்றனர்.

ஒவ்வொரு தாலுகாவிலும் தனிமை முகாம்கள் இருந்தும் மாவட்ட எல்லை முகாம்களில் தங்கவைப்பதால் இடநெருக்கடி ஏற்படுகிறது.இதை தவிர்க்க தாலுகா தனிமை முகாம்களில் தங்கவைக்கலாம். இதோடு உடனடியாக பரிசேதனை செய்து பாதிப்பில்லாதவர்களை வீட்டு தனிமைக்கு அனுப்பி கண்காணிக்கவேண்டும்.

இல்லையெனில் அதிகரிக்கும் எண்ணிக்கையால் வருவாய், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சிரமங்கள் அதிகரிக்கும். மாவட்ட நிர்வாகம்தான் திட்டமிடலுடன் செயல்படவேண்டும்.

Related posts

Leave a Comment