கடைகளை திறக்க எதிர்ப்பும் ஆதரவும்

சாத்துார்:சாத்துாரில்கொரோனா பரவலை தடுக்க வியாபாரிகள் நலசங்கம் சார்பில் இன்றுகாலை 6:00 முதல் பகல் 3:00 மணி வரை கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிறு வியாபாரிகள் அரசு விதிமுறைபடிகாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரைதிறக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

பொடிவடை கடை உரிமையாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:மொத்த விற்பனை செய்யும் பெரிய மளிகை கடைகள்,அரிசி வியாபாரிகளுக்கு மதியம் 3:00 மணிக்கு பிறகு வியாபாரம் இருக்காது என்பதால் பூட்டுகின்றனர்.சிறு வியாபாரிகள், ஓட்டல், ஜவுளி கடைகளில் மாலையில் தான் வியாபாரம் நடக்கும்என்பதால் அரசு விதிப்படி கடைகள் திறக்கப்படும், என்றார்.

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரிலும் இன்று முதல் 15 நாட்களுக்கு தினமும் காலை 6:00 மணி முதல் பகல் 3:00 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என ஸ்ரீவில்லிபுத்துார் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் குருசாமி தெரிவித்தார்.இதுபோல் விருதுநகரிலும் மேற்கண்ட நேரம்படி கடைகள் இயங்கும் என வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment