கொரோனா பாதித்தவர் தவறான முகவரி அழைக்க சென்ற நகராட்சி ஊழியர்கள் திணறல்

விருதுநகர்:விருதுநகரில் கொரோனா பரிசோதனையின் போது தவறான முகவரி கொடுத்த வரை கண்டுபிடிக்கமுடியாது நகராட்சி சுகாதார ஊழியர்கள் திணறினர்.

விருதுநகர் தாலுகா சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சளி மாதிரி சேகரித்து அரசு தலைமை மருத்துவமனையில் பரிசோதிக்கப்படுகிறது. நேற்று முன் தினம் தொற்று உறுதியான 37 வயது நபர் விருதுநகர் காளியம்மன் கோயில் தெருவில் வசிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்ல அங்கு சென்ற போது அப்படி யாரும் இல்லை என்பது தெரிய வந்தது. அலைபேசி எண்ணும் தவறாக இருந்தது. இப்படி தவறான முகவரி தருபவர்களால் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறினர்.

Related posts

Leave a Comment