மரங்களை வாழவைக்கும் வடமலைகுறிச்சி மாமனிதர்கள்

விருதுநகர்:ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சாலை அமைக்கும் முன் இருபுறமும் பலன் தரும் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பர். சாலை அமைக்கும் பணி முடியும் போது இருபுறமும் மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து பசுமை போர்த்திய சோலை போல் சாலையில் மிடுக்காக காட்சியளிக்கும். வாகனங்களில் நீண்ட துாரம் பயணிப்போர் வெயில் தாக்குதலின்றி குளுமையை அனுபவிப்பர். பயண களைப்பும் தெரியாது.

தற்போது சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மரங்களை காவு வாங்கும் போக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.இதற்காக நெடுஞ்சாலைத்துறையின் சாலை ஆய்வாளர்கள் சிலர் மர அறுவை மில் உரிமையாளர்கள் சிலருடன் கூட்டு சேர்ந்து சாலையோர மரங்களை வெட்டுவதற்காக பட்டுப்போகும் தருவாயில் உள்ளது, ஆபத்து மிக்கது, என பொய்யான அறிக்கை தயாரித்து உயர் அதிகாரிகளிடம் கையொப்பம் பெற்று மரங்களை வெட்டி காசு பார்க்கும் அவலம் நெடுஞ்சாலைத்துறையில் நடக்கிறது..

இதே காரணத்தை கூறி விருதுநகர் வடமலைகுறிச்சி சாலையில் நுாற்றாண்டை கடந்த புளிய மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை துடித்தது. அரிவாள், கோடாரிகளுடன் புகுந்தது. கிராம மக்கள் ஒற்றுமையுடன் எதிர்த்ததால் மரங்கள் காப்பாற்றப்பட்டன. மரங்களை காத்து சுற்றுச்சூழல் பேணும் மாமனிதர்களாக வடமலைகுறிச்சி கிராம மக்கள் இயற்கை ஆர்வலர்களால் போற்றப்படுகின்றனர்.

Related posts

Leave a Comment