தற்சார்பு இந்தியா திட்டம்: வெங்கையா வரவேற்பு

புதுடில்லி: ”தன் உள்ளார்ந்த வலிமைகளை பயன்படுத்தி நாடு முன்னேறவே தற்சாப்பு இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது” என துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு தெரிவித்தார்.

டில்லியில் ‘எலிமென்ட்ஸ்’ மொபைல் செயலியை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: இந்த செயலியை வாழும் கலை அமைப்பை சேர்ந்த 1000க்கும் அதிகமான தகவல் தொழில்நுட்ட வல்லுனர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் இந்த முயற்சி பெரும் பாராட்டுக்குரியது. இது சுயசார்பு இந்தியாவில் வைக்கப்பட்டுள்ள ஒரு படியாகவே கருதுகிறேன்.

நாட்டின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தி நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மனித வளங்களை பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியுடன் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவே தற்கார்பு இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் சுயசார்பு இந்தியா மென்பொருள் கண்டுபிடிப்பு சவாலில் தொழில்நுட்பத் துறையினர் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறு வெங்கைய நாயுடு பேசினார்.

Related posts

Leave a Comment