தென் மாவட்டங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கோரிக்கை:

விருதுநகர் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால், அதிகம் பாதிப்புக்குள்ளான 57 இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக (Containment Zone) மாவட்ட கலெக்டர் கண்ணன் அறிவித்துள்ளார். அந்தப் பகுதிக்குள் இருந்து யாரும் வெளியே வரக்கூடாது. வெளியிலிருந்து யாரும் உள்ளேயும் செல்லக்கூடாது எனவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் விவரம்,விருதுநகரில், அண்ணாமலைதெரு,மொன்னி தெரு, முத்துராமன்பட்டி, சிவந்திபுரம், அல்லம்பட்டி, என்.ஜி.ஓ.காலனி, லட்சுமி நகர், பர்மா காலனி, பாண்டியன் நகர், ரெயில்வே பீடர் ரோடு, அய்யனார் நகர்,மெட்டுக்குண்டு, ஓ.கோவில்பட்டி, சத்திரரெட்டியபட்டி, ஆமத்தூர் ஆகியவையும், அருப்புக்கோட்டையில் ஆலடிப்பட்டி,கொப்புசித்தம்பட்டி, சொக்கலிங்கபுரம், வேலாயுதபுரம், பள்ளிக்கூடத் தெரு, திருநகரம், திருமேனி தெரு, பாலவநத்தம், வடக்குபட்டி, பொம்மக்கோட்டை, கோபாலபுரம், இ.பி.காலனி, பாலையம்பட்டி, திருச்சுழி, மிதலைக்குளம், உலக்குடி, வீரசோழன், ஏ.முக்குளம் ஆகிய பகுதிகளும், சிவகாசியில் பூலாவூரணி, ரிசர்வ் லயன், சித்துராஜபுரம், பாரைப்பட்டி, பேராபட்டி, சீதக்காதி தெரு, முஸ்லிம் தெரு, விஸ்வநத்தம், காளியப்பா நகர், வெற்றிஞானியார் தெரு ஆகிய பகுதிகளும், ராஜபாளையம் பகுதிகளாக செட்டியார் பட்டி,கலங்காப்பேரியும், வத்திராயிருப்பு பகுதியில் மேலக்கோட்டையூர், கிருஷ்ணன் கோவில், சுந்தரபாண்டியம் ஆகிய பகுதிகளிலும், வெம்பக்கோட்டை பகுதிகளில் செல்லம்பட்டி,எதிர்கோட்டை, கே.மடத்துப்பட்டி,பனையடிப்பட்டி, கட்டபொம்மன் தெரு பகுதிகளும், சாத்தூர் பகுதிகளில் போத்திரெட்டிபட்டி,படந்தால், பங்களாதெரு, நகராட்சி தெரு ஆகியவையும், திருவில்லிபுத்தூரில் கூனங்குளம் பகுதியும், கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம், மற்றும் அனைத்து வியாபாரம், தொழில் நிறுவனங்கள் என அனைத்திற்கும் முற்றிலும் தடைவிதிக்கப்படுவதாகவும், மாவட்ட நிர்வாகம் மறு அறிவிப்பு வெளியிடும் வரை, இந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடரும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கட்டுப்பாடு அறிவிக்கப்பட்ட பகுதிகளில், வருவாய்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை அதிகாரிகள் இணைந்து வீடு வீடாக சென்று பரிசோதைனைகள் செய்யும் பணிகளை செய்ய வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் கண்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment