அரசியல் விளம்பரங்களுக்குத் தடை.. பேஸ்புக் திடீர் ஆலோசனை

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் மக்களின் கவனத்தையும் நம்பிக்கையும் ஈர்ப்பதற்காகச் சமுக வலைத்தளத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய சமுக வலைத்தளமான பேஸ்புக் அரசியல் விளம்பரங்களைத் தடை செய்ய ஆலோசனை செய்து வருகிறது. பேஸ்புக் உயர்மட்ட நிர்வாகம் இதுகுறித்து ஆலோசனை செய்து வரும் நிலையில், அமெரிக்க அரசியலிலும் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

டிஜிட்டல் உலகம் இன்று உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நிலையில் சமுக வலைத்தளத்தை மிகப்பெரிய அளவில் பயன்படுத்தி மக்கள் ஈர்க்க முடியும், இதனால் ஆட்சியையும் பிடிக்க முடியும் என்பது இன்று அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இதன் ஆரம்பம் என்னவோ அமெரிக்காவில் தான். இதே அமெரிக்காவில் தற்போது சமுக வலைத்தள துறையில் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் பேஸ்புக் அரசியல் விளம்பரங்களைத் தடை செய்ய ஆலோசனை செய்து வருகிறது.

கொள்கை பிரச்சனை சமுக வலைத்தளமான பேஸ்புக்-ல் செய்யப்படும் அரசியல் விளம்பரங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் விளம்பரங்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யத் தேவையில்லை என்கிற கொள்கை வடிவத்தில் சிக்கியுள்ளது. இந்தக் கொள்கை மூலம் பொய்யான தகவல்களும், தவறான தகவல்களும் மக்கள் மத்தியில் பரவும். பேஸ்புக்-ன் இந்தக் கொள்கையை எதிர்த்து பல்வேறு சட்ட வல்லூனர்களும், வழக்கறிஞர்களும், மக்கள் அமைப்புகளும் பல்வேறு கேள்விகளைக் கேட்டு வருகிறது.

பதிவுகள் நீக்கப்படுதல் பொய்யான தகவல்களும், தவறான தகவல்களும் குறித்து வல்லூனர்களும், வழக்கறிஞர்களும், மக்கள் அமைப்புகளும் கேள்வி கேட்ட பின்பும் பேஸ்புக் அதை நீக்க எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாகச் சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் மே 29ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்காகப் போராடிய மக்களைக் கொள்ளைக்காரர்கள் (Thugs) என்றும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த ராணுவம் தயாராக உள்ளது என்றும், திருட்டு ஆரம்பித்தால், சுட ஆரம்பிக்கப்படும் எனப் பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவிற்குப் பல கோடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் பதிவை நீக்குவதற்காக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை பேஸ்புக் நிர்வாகம். இதன் பின் பல முன்னணி நிறுவனங்கள் பேஸ்புக் உடனான விளம்பர வர்த்தகத்தை நிறுத்திக்கொண்டது.

டிரம்ப் 2016 அமெரிக்க அதிபர் டிரம்ப் 2016இல் பேஸ்புக் விளம்பரத்தை மிகப்பெரிய அளவில் பயன்படுத்திப் பல லட்ச மக்களை ஈர்த்தார். இந்நிலையில் பேஸ்புக் அரசியல் விளம்பரங்களுக்குத் தடை விதிப்பது குறித்துப் பேஸ்புக் ஆலோசனை செய்து வருகிறது.

அலெக்ஸ் ஸ்டேமோஸ் பேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரி Alex Stamos தனது டிவிட்டரில், ஆன்லைன் அரசியல் விளம்பரங்கள் தடை அதிகப் பணம் படைத்தவர்களுக்கும், புதியதாக அரசியலில் வந்தவர்களுக்கும், மக்கள் முன் அறிமுகம் தேவைப்படுபவர்களைத் தான் அதிகளவில் பாதிக்கும் எனத் தெரிவித்து இருந்தார்.

3 மாத வர்த்தகம் கடந்த 90 நாட்களில் அமெரிக்க அதிபருக்காகப் போட்டி போடும் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் சுமார் 29.2 மில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பேஸ்புக் விளம்பரத்தில் செலவு செய்துள்ளனர். இதைப் பேஸ்புக் நிறுவனமும் ஒப்புக்கொள்கிறது.

டிவிட்டர் டிவிட்டர் கிட்டதட்ட பெரும்பாலான அரசியல் விளம்பரங்களைத் தடை செய்துள்ளது. ஆனாலும் பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமுகப் பிரச்சனைகள் குறித்து “cause-based” விளம்பரங்களைத் தனது தளத்தில் வெளியிட்டு இதன் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டி வருகிறது.

கூகிள் யூடியூப் பேஜ்-ல் முக்கியமான இடத்தை டிரம்ப் அரசியல் பிரச்சாரத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் மிகப்பெரிய வீடியோ சேவை நிறுவனமான யூடியூப் வாடிக்கையாளர்களை ஈர்க்க உள்ளார் டிரம்ப்.

Related posts

Leave a Comment