சித்த மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது… ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தகவல்

சென்னை: கொரோனா பாதிப்புக்கு இந்திய மருத்துவ முறையை அரசு நம்பவில்லை என்பது தவறான கருத்து என சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டில் கொரோனா வார்டை ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார். மேலும், கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருக்க சித்த மருத்துவம் பயனுள்ளதாக இருப்பதாகவும் ஆங்கில மருத்துவ சிகிச்சை முறைக்கு இணையாக சித்த மருத்துவ சிகிச்சை முறைக்கும் அரசு முக்கியத்துவம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சித்த மருத்துவ சிகிச்சை முறையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது ரெம்டெசிவர், டாசிலிசுமாப் போன்ற மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகவும், இறப்பு எண்ணிக்கையை குறைக்க ஆரம்பக்கட்டத்திலேயே நோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். கூறியுள்ளார்.

இதனிடையே சென்னையில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட உள்ளதாகவும் தமிழகத்தில் பரிசோதனை அதிகப்படுத்தப் பட்டுள்ளதை அறிந்து மத்தியக் குழு பாராட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். கொரோனாவை கட்டுப்படுத்த சென்னையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை போன்று தான் மற்ற மாவட்டங்களிலும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் விளக்கம் அளித்தார்.

Related posts

Leave a Comment