தலைவரே.. நல்லா ஆடினா மட்டும் போதாது.. ஜெயிச்சுட்டு வரணும்.. கோலிக்கு கங்குலியின் ஓபன் மெசேஜ்!

மும்பை : வரும் டிசம்பரில் இந்திய அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதுதான் இந்திய அணி அடுத்து ஆட உள்ள இருதரப்பு கிரிக்கெட் தொடராக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த தொடர் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி ஒரு பேட்டியில் பேசினார். அப்போது கேப்டன் விராட் கோலிக்கு ஒரு “மெசேஜ்” ஒன்றையும் கூறினார்.

கிரிக்கெட் பாதிப்பு கொரோனா வைரஸ் காரணமாக முடங்கி இருந்த கிரிக்கெட் அணிகள் தற்போது தான் பயிற்சி, தொடர்களில் பங்கேற்கத் துவங்கி உள்ளன. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன.

டெஸ்ட் தொடர் இந்தியாவை தவிர கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் பயிற்சி செய்யத் துவங்கி விட்டன. இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டிசம்பரில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதற்கான அறிவிப்பும் சில வாரங்கள் முன்பு வெளியானது.

இந்தியா வெற்றி கடைசியாக இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் 2018இல் டெஸ்ட் தொடரில் மோதின. அந்த தொடரை இந்தியா கைப்பற்றியது. அப்போது ஆஸ்திரேலிய மண்ணில் முதன் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா சாதனை செய்து இருந்தது.

பலவீன அணி அந்த தொடரில் முக்கியமாக ஆஸ்திரேலிய அணி பலவீனமாக காட்சி அளித்தது. தடை காரணமாக ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இடம் பெறாத அந்த ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்தியா வெற்றி பெற அதுவும் ஒரு காரணம்.

ஸ்மித், வார்னர் தற்போது நடக்க உள்ள டெஸ்ட் தொடர் எளிதாக இருக்காது. காரணம், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் தடையில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி உள்ளனர். அது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி ஒரு பேட்டியில் குறிப்பிட்டு பேசினார்.

கடினமான தொடர் “அது மிகவும் கடினமான தொடராக இருக்கும். 2018 தொடர் போல அது இருக்காது. இப்போது ஆஸ்திரேலியா வலுவான அணியாக இருக்கப் போகிறது. ஆனால், நம் அணியும் நல்ல அணி தான். நம்மிடமும் நல்ல பேட்டிங், பவுலிங் உள்ளது” என்றார் கங்குலி.

நம்பிக்கை உள்ளது “இந்திய அணி மீது நம்பிக்கை உள்ளது. நாம் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும். வெளிநாடுகளில் சிறந்த அணியை நமக்கு நன்றாக தெரியும். அவர்கள் நன்றாக பேட்டிங் செய்வார்கள்.” என்று தற்போதைய இந்திய அணி குறித்து தெரிவித்தார் கங்குலி.

ரன் குவிப்பு “நாங்கள் சொந்த மண்ணில் மட்டுமில்லாது வெளிநாடுகளில், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்தில் சிறப்பாக ஆடிய போது, டெஸ்ட் போட்டிகளில் 400, 500, 600 ரன்கள் குவித்தோம்.” என தன் கேப்டன்சியில் ஆடிய இந்திய அணி குறித்து பேசினார்.

மெசேஜ் “நான் விராட்டை தலைவர் என்று தான் சொல்வேன். ஏனெனில் அவரது மதிப்பு மிக அதிகம். விளையாட களமிறங்கும் போது, அணியுடன் களத்தில் செல்லும் போது நான் தொலைக்காட்சியில் பார்க்கிறேன். ஆஸ்திரேலியாவில் நன்றாக ஆட வேண்டும் என்று மட்டும் நான் எதிர்பார்க்கவில்லை, வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என்று விராட் கோலிக்கு தன் மெசேஜ்-ஐ கூறினார் கங்குலி.

Related posts

Leave a Comment