மதுரையில் முழு ஊரடங்கு நிறைவு: இன்று முதல் தளர்வுகள் அமல்

🔲சென்னை;மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், முழு ஊரடங்கு நிறைவடைந்தது. இன்று முதல், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அமலுக்கு வருகிறது.வருவாய் துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்யமிஸ்ரா, மதுரை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள, கடிதம்:மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், முழு ஊரடங்கு, 14ம் தேதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

🔲இன்று முதல், ஊரகப்பகுதிகளில், சிறிய கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், சர்ச்களை, பொது மக்கள் வழிபாட்டுக்கு திறக்க அனுமதிக்கலாம்.

🔲வழிபாட்டின் போது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.நகர்ப்புற பகுதிகளில், அனுமதி கிடையாது.அனைத்து தொழிற்சாலைகளும், நுாறு சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்

🔲தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அவற்றை சார்ந்த சேவை நிறுவனங்கள், 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். குறைந்தபட்சம், 20 சதவீத பணியாளர்கள், வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும்.வணிக வளாகம் தவிர்த்து, நகைக்கடை,ஜவுளிக்கடை போன்றவை, 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

🔲ஓட்டல்கள், டீக்கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் போன்றவை, காலை, 6:00 மணியிலிருந்து, இரவு, 8:00 வரை செயல்படலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment