மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் துவங்க கடன்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சேவைகள் என்ன?.

– மாவட்டத்தில் 31 ஆயிரத்து 972 பேர் மாற்றுத்திறனாளிகளாக பதிவு செய்துள்ளனர். இவர்களது தேவையை அறிந்து அரசின் சலுகைகளை பெற்று தரப்படுகிறது.

மன நலம் பாதித்தோருக்கு நிதி உதவி என்ன.

மன நலம் 45 சதவீதம் குன்றியோருக்கு, 75 சதவீதத்திற்கு மேல் கடுமையான கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், 40 மற்றும் அதற்கு மேல் தசை திசைவு நோயால் பாதிக்கப்பட்டோர், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம்தோறும் தலா ரூ.1500 வழங்கப்படுகிறது.

சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் நிதி வழங்கப்படுகிறதா.

– கண் பார்வை, செவித்திறன், கை, கால் பாதித்தோருக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்கப்படுகிறது. வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி உண்டா.- அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பற்றோர் நிவாரண உதவி தொகை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பெற்றுத்தரப்படுகிறது.

*

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை தடையில்லாமல் கிடைக்கிறதா.

– 2020 ல் ஜூன் வரை வழங்கப்பட்டு விட்டது.

வேறு சில நலத்திட்ட உதவிகள் என்ன.

– 40 சதவீதம் பாதிப்புள்ளோருக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல், கை, கால் பாதித்த, காது கேளாதோர், பார்வையற்றோருக்கு நல்ல நிலையில் உள்ளவர்களை திருமணம் செய்து வைத்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிற மாற்றுத்திறனாளிகளிகளை திருமணம் செய்து கொண்டால் டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், மற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை.

– 1 முதல்- 5 ம் வகுப்பு ரூ.1000, 6 – முதல் 8 ம் வகுப்பு ரூ.2000, 9 முதல் – பிளஸ் 2 ரூ.3000, இளநிலை படிப்பு ரூ.4000, முதுகலை படிப்பு ரூ.7000 என கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.

உயர் கல்வி பயில்வோருக்கு சலுகைகள் உண்டா.

– உயர் கல்வி நிலையங்களில் கல்வி கட்டணம் மற்றும் சிறப்பு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தல்,சட்டப்படிப்பு பயின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழக்கறிஞராக பதிவு செய்வதற்கு, சட்ட புத்தகம் வாங்க ரூ.3000 வழங்கப்படுகிறது.

அரசின் பிற சலுகைகள் என்ன.

– அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்தில் தமிழ்நாடு முழுவதும் இலவச பஸ் பயண சலுகை உண்டு. தனியாக பயணம் செய்ய இயலாத மாற்று திறனாளிகளுடன் உதவியாளர் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் பயணம் செய்யவும் சலுகை உண்டு.

சுய தொழில் துவங்க உதவி செய்யப்படுமா.

– பிரதமர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 5 சதவீதம் தனிநபர் பங்கு தொகையை அரசு வழங்குகிறது. தேவிய ஊனமுற்றோர் நிதி மேம்பாடு நிறுவனத்தின் மூலம் சுய தொழில் துவங்க ரூ.25 ஆயிரம் முதல் ரூ.25 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

மன வளர்ச்சி குன்றியோருக்கான காப்பகம் உள்ளதா.

– மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகத்தில் சேர்ப்பதற்கு சிவகாசி ஈஞ்சார் விலக்கில் அரசு நிதி உதவியுடன் ஜீவக்கல் மன நல காப்பகம் இருபாலருக்கும் இலவமாக நடத்தப்படுகிறது.

மன நலம் குன்றிய பெண்களுக்கு காப்பகம் உண்டா.-

விருதுநகர் குல்லுார் சந்தையில் அரசின் நிதியுடன் 14 வயதுக்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியோருக்கான பெண்கள் காப்பகம், பயிற்சி மையம் உள்ளது என்றார்.

தொடர்புக்கு 04562 252 068.

Related posts

Leave a Comment