தமிழகத்தில் மேலும் 4,549 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 5,106 பேர் டிஸ்சார்ஜ்- 69 பேர் மரணம்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 4,549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5,106 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 69 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 4 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா உறுதியானது.

Related posts

Leave a Comment