தேங்குது கழிவுநீர்; கடிக்குது கொசு திணறும் திருவிருந்தாள்புரம் மக்கள்

காரியாபட்டி:தரை தள தொட்டியிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குளம் போல் தேங்கி கிடப்பதால் கொசு உற்பத்தியாகி பகலில் கடிக்கும் நிலையில் காரியாபட்டி திருவிருந்தாள்புரம் மக்கள் திணறுகின்றனர்.

கழிவுநீர் செல்ல சாக்கடை வசதி இல்லை. வீதிகள் மண் ரோடாக இருப்பதால் மழை நேரங்களில் சகதியாகின்றன. தாமிரபரணி குடிநீர் ஒருநாள் விட்டு ஒரு நாள் சப்ளையாகிறது. அதுவும் உப்பு தண்ணீருடன் கலந்து வருவதால் குடிநீர் சுவை மாறி விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. போதிய தெருவிளக்குகள் இல்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப தொட்டிகள் அமைக்காததால் புழக்கத்திற்கான தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது.

Related posts

Leave a Comment