நெரிசலை கட்டுப்படுத்த வாகனங்களுக்கு ஸ்டிக்கர்

விருதுநகர்:விருதுநகர் மெயின் பஜார் பகுதியில் டூவீலர்கள், கார்களில் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. நகரில் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் பொருட்கள் வாங்க வாகனங்கள் வரும் வகையில் திங்கள், வியாழன் நீல நிற ஸ்டிக்கர்,

செவ்வாய், வெள்ளி பச்சை நிற ஸ்டிக்கர், புதன், சனி சிவப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மெயின் பஜார் வரும் வாகனங்களுக்கு கே.வி.எஸ்., நடுநிலைப்பள்ளி மைதானம், தேசபந்து மைதானம், பழைய பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளிலும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடக்கிறது, என நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி கூறினார்.

Related posts

Leave a Comment