கார்கில் விஜய் திவாஸ் கொண்டாட்டம்… ராணுவ வீரர்களுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மரியாதை

டெல்லி : கார்கில் வெற்றியின் 21வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி ராணுவ வீரர்களுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது மரியாதையை செலுத்தியுள்ளனர்.

Karigil நினைவு தினம்: பாகிஸ்தானை வீழ்த்திய அந்த மாஸ்டர்பிளான் கடந்த 1999ல் ஜூலை 26ம் தேதி பாகிஸ்தானுடன் நடைபெற்ற 3 மாத கார்கில் போரில் வெற்றி பெற்றதாக இந்தியா அறிவித்தது. இந்த போரில் 500க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த கார்கில் வெற்றியின் 21வது ஆண்டு கொண்டாட்டம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தின்மூலம் மரியாதை தெரிவித்துள்ளார்.

21வது ஆண்டு நினைவு கடந்த 1999ல் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. ஏறக்குறைய 3 மாதங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. ஆயினும் 500க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் தங்களது உயிரை தியாகம் செய்து வீர மரணம் அடைந்தனர். இந்த நிகழ்வின் 21வது ஆண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

சச்சின் டெண்டுல்கர் மரியாதை இந்த நிகழ்வையொட்டி பிரதமர் மோடி ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தி டிவீட் செய்துள்ளார். இதேபோல முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் டிவிட்டர் மூலம் மரியாதை செலுத்தியுள்ளனர். சச்சின் தன்னுடைய டிவிட்டர் பதிவில், கார்கில் போரில் ராணுவ வீரர்களின் வீரம் மற்றும் சுயநலமில்லாத தியாம் எப்போதுமே நினைவுக்கூறத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

லஷ்மன், ரெய்னா பாராட்டு முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மனும் கார்கில் போரின் வீரர்களுக்கு மரியாதை தெரிவித்துள்ளார். அவர்களின் தியாகத்திற்கு நாம் எப்போதுமே கடன்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இதேபோல முன்னாள் வீரர் முகமது கையிப் மற்றும் சுரேஷ் ரெய்னாவும் மரியாதை செலுத்தியுள்ளனர். கார்கில் போரில் நிஜமான ஹீரோக்கள் தங்களது உயிரை பணயம் வைத்து போராடியதால் நாம் தற்போது சுதந்திர காற்றை சுவாசிப்பதாக ரெய்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இஷாந்த் சர்மா மரியாதை இதேபோல கிரிக்கெட் வீரர்கள் மயங்க் அகர்வால், இஷாந்த் சர்மாவும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். நம்மை காப்பதற்காக கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு வாழும் ஹீரோக்களுக்கு மரியாதை செலுத்துவதாக இஷாந்த் சர்மா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment