போகிற போக்கில் என்னை கொரோனா லேசாக டச் செய்துவிட்டது.. கலகலப்பாக பேசிய செல்லூர் ராஜு.. செம வரவேற்பு!

மதுரை: கொரோனா என்னை லேசாக டச் செய்துவிட்டது போனது என்று அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு உற்சாகமாக பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதிமுக, திமுக என்று இரண்டு முக்கிய கட்சியிலும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது

சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர்கள் தற்போது தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 17ம் தேதி குணமடைந்தார்.

பேட்டி அளித்தார் இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்துள்ளார். அதில், போகிற போக்கில் கொரோனா என்னை டச் செய்து விட்டது. வடிவேல் போல என்னை கொரோனா லைட்டாக டச் செய்துவிட்டது சென்றது . எனக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தது. பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். நீங்களே பார்க்கலாம்.

பயம் இல்லை எனக்கு பயப்படும்படி எதுவும் பிரச்சனை இல்லை. எனக்கு ஆக்சிஜன் சிலிண்டர் எல்லாம் வைக்கவில்லை.மருத்துவமனை சென்றேன், நன்றாக ரெஸ்ட் எடுத்தேன். ரெஸ்ட் எடுத்துவிட்டு தற்போது சுறுசுறுப்பாக வந்து இருக்கிறேன்.

பிரார்த்தனை செய்தனர் எனக்காக பலர் பிரார்த்தனை செய்தனர் . என் குடும்பத்திற்காக பலர் வேண்டினார்கள். அவர்கள் எல்லோருக்கும் நன்றி. என் குடும்பம் சார்பாக எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இப்போது நலம்முடன் இருக்கிறேன், எல்லோருக்கும் நன்றி, என்று செல்லூர் ராஜு குறிப்பிட்டு இருக்கிறார்.

Related posts

Leave a Comment