ஒருபக்கம் லாக்டவுன்.. இன்னொருபக்கம் சரியும் கொரோனா கிராப்.. சரியான பாதையில் தமிழகம்.. குட்நியூஸ்!

சென்னை: தமிழகத்தில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கேஸ்கள் குறைய தொடங்கி வருவது நல்ல முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று 5864 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 239978 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதேபோல் இன்று சென்னையில் 1175 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையில் மொத்தமாக 98767 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு பக்கம் தினமும் 5000 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் வரும் நிலையில் தற்போது லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை இருந்த தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சில சில தளர்வுகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி இ – பாஸ் தொடங்கி பேருந்து போக்குவரத்து தடை வரை பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்து உள்ளது .

கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் தமிழக முதல்வர் பழனிச்சாமி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மருத்துவர்கள் உடன் செய்த ஆலோசனைக்கு பின் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. லாக்டவுன் தொடர்ந்தால் கேஸ்கள் கண்டிப்பாக குறையும். இன்னும் ஒரு மாதம் கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் கண்டிப்பாக கேஸ்கள் குறையும்.அதன் பின் தளர்வுகளை கொண்டு வரலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்

முடிவு மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனைக்கு பின் தமிழக முதல்வர் லாக்டவுனை நீட்டிக்கும் அதிரடி முடிவை எடுத்து இருக்கிறார். அதாவது தற்போது கேஸ்கள் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வர தொடங்கி உள்ளது. இன்னும் கொஞ்ச நாள் லாக்டவுனை நீடித்தால் கண்டிப்பாக கேஸ்கள் குறையும். சென்னையில் கொரோனா குறைய தொடங்கியது போலவே தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கேஸ்கள் குறைய வேண்டும் என்பதால் இந்த லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நடக்கிறது தற்போது அதற்கு ஏற்றபடி தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் 6000-7000 கேஸ்கள் வந்தது. சில நாட்கள் 7 ஆயிரத்திற்கும் நெருக்கமான கேஸ்கள் வந்தது. இதனால் தினசரி கேஸ்கள் விண்ணை தொடும் என்று அச்சம் ஏற்பட்டது. ஆனால் இப்படி ஒரு வாரமாக தினமும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.

அதிக டெஸ்ட்கள் தமிழகத்தில் இப்படி கேஸ்கள் குறைய காரணமாக , வேகமாக செய்யப்பட்ட கொரோனா சோதனைதான். வேகமாக தினமும் 62 ஆயிரத்திற்கும் அதிகமான சோதனைகள் தமிழகத்தில் செய்யப்படுகிறது. இதனால் வேகமாக கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனுக்குடன் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். லேசான அறிகுறி இருக்கும் நபர்களுக்கு கூட கொரோனா சோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு முடிவு அறிவிக்கப்படுகிறது.

கொஞ்சம் குறைந்துள்ளது இதனால் வேகமாக அதிகரித்த கேஸ்கள் தற்போது கொஞ்சம் குறைய தொடங்கி உள்ளது. மொத்தமாக கேஸ்கள் குறையவில்லை என்றாலும் கூட கொஞ்சம் கொஞ்சமாக கேஸ்கள் சரிய தொடங்கி உள்ளது. தற்போது லாக்டவுனும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் லாக்டவுன் முடியும் போது, கேஸ்களும் மொத்தமாக குறையும் என்று கூறுகிறார்கள். ஆகஸ்ட் இறுதியில் மொத்தமாக கேஸ்கள் குறைய வாய்ப்புள்ளது.

வரிசையாக சரியும் தமிழகத்தில் தற்போது கொரோனா கிராப் உச்சத்தை கடந்துள்ளது. ஆனால் இன்னும் ஆபத்து நீங்கவில்லை . இன்னும் ஒரு மாதம் கட்டுப்பாடுகளை பின்பற்றினால், வேகமாக கேஸ்கள் சரியும். இந்த மாத இறுதியில் கேஸ்கள் மொத்தமாக சரியும். தமிழகத்தில் தற்போது கொரோனா மரணங்கள் மட்டுமே அதிகரிக்க தொடங்கி உள்ளது. கேஸ்கள் சரிய சரிய தானாக பலி எண்ணிக்கையும் வேகமாக குறையும் என்று கூறுகிறார்கள்.

Related posts

Leave a Comment