இலங்கை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சி அமோக வெற்றியைப் பெற்றுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5-ந் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.பிற்பகலில்தான் தபால் வாக்கு முடிவுகள் வெளியாகின. தொடக்கம் முதலே மகிந்த ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனாதான் முன்னணியில் இருந்தது. கடைசி முடிவுகளின்படி மொத்தம் 145 இடங்களை ராஜபக்சே கட்சி கைப்பற்றி உள்ளது.
இதனிடையே ராஜபக்சே கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றிய நிலையிலேயே அவருக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு மகிந்த ராஜபக்சே தமது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்தார்.

Related posts

Leave a Comment