தவிர்க்கலாமே கொரோனா டெஸ்ட் முடிவு வரும் வரை தனித்திருப்போமே

ஸ்ரீவில்லிபுத்துார்:மாவட்டத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொண்டவர்கள் முடிவுகள் வரும் வரை வீட்டிலே தனித்திருப்பது அவருக்கு மட்டுமின்றி அவரது குடும்பத்தினருக்கும் நல்லது. ஆபத்தை உணராமல் வெளியில் நடமாடுவதால் அனைவருக்கும் ஆபத்து என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

\கடந்தசில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து அதன் எண்ணிக்கை 9500 ஐ தாண்டி விட்டது. சோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் வந்தவுடன் மருத்துவமனை ,மையங்களுக்கு அனுப்பபடுகின்றனர். அங்கு நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள், மருந்துகள் தரப்பட்டு குறைந்த பட்சம் 3 நாட்கள் பின் வீடுகளுக்கு அனுப்பபட்டு 15 நாட்கள் தனிமையை கடைபிடிக்க அறிவுறுத்துகின்றனர்.

ஆனால் அதை பலரும் கடைபிடிப்பதில்லை.சோதனை எடுத்தவர்களுக்கு முடிவுகள் வர குறைந்தது 4 நாட்கள் ஆவதால் அதுவரை அவர்கள் சர்வசுதந்திரமாக நடமாடுகின்றனர். இவர்கள் தனிமையை கடைபிடிக்காததால் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர், தெரு மற்றும் பஜார்வீதிகளில் பழகியவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இவ்வாறு தான் பரவல் அதிகரித்து நகரங்களை கடந்து கிராமங்களிலும் தொற்று பரவியுள்ளது. இதை தவிர்க்க பாதிக்கபட்டவர்கள் தனித்திருப்பது அவசியம் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

விரைந்து செயல்படுங்க

கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க டெஸ்ட் எடுத்தவர்களின் முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் வரவேண்டும். அதுவரை அவர்கள் தனித்திருப்பதையும், பாசிட்டிவ் வந்தவர்கள் சிகிச்சை முடிந்து திரும்பிய பிறகு வீட்டில் தனித்திருப்பதின் அவசியத்தையும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இதில் மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்படவேண்டும்.

-சுந்தரமூர்த்தி, ஓய்வு அரசு அலுவலர் , ஸ்ரீவில்லிபுத்துார்.

Related posts

Leave a Comment