33 வயதில் சுரேஷ் ரெய்னா ஓய்வு.. தோனி ஓய்வை அறிவித்த பின் வெளியான அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை : இந்திய அணி கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

தோனி ஆகஸ்ட் 15 இரவு 7.29 மணிக்கு ஓய்வை அறிவித்தார். அந்த ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில், ரெய்னா ஓய்வு அறிவிப்பு வெளியானது. இந்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரெய்னாவுக்கு 33 வயது மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் ரெய்னா சுரேஷ் ரெய்னா 2005இல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். இடது கை பேட்ஸ்மேன் ஆன அவர், மிடில் ஆர்டரில் அதிரடி பேட்ஸ்மேன் ஆக அணிக்கு கை கொடுத்தார். தோனியின் கேப்டன்சியில் இந்திய அணியின் முக்கிய வீரராக வலம் வந்தார்.

தோனி ஓய்வு 2018இல் கடைசி ஒருநாள் போட்டியில் ஆடி இருந்தார் சுரேஷ் ரெய்னா. அவரை இந்திய அணியில் தேர்வு செய்யாதது குறித்து அவர் வருத்தத்தில் இருந்தார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார்.

Related posts

Leave a Comment