சிவகாசில என்ன தொழில் பண்ணுனாலும் ஆறுமாசம் பொறுமை வேணும்

சிவகாசில என்ன தொழில் பண்ணுனாலும் ஆறுமாசம் பொறுமை வேணும் .அப்புறம் முக்கியமான விஷயம் கூட்டு வியாபாரம் பண்ணவே பண்ணாதீங்க .இளைத்தவன் முதலையும் பிடுங்கிட்டு போய்டுவானுங்க .சுயமா யோசிச்சி முடிவெடுங்க ! நெறையா பேரு பட்டாசு வியாபாரத்தில் போயி விழுறாங்க .தப்பில்ல . ஆனா அதுக்கு நிறைய அனுபவம் தேவை .மாப்புள நீ பாத்துக்கோடான்னு சொல்லி ட்டா அப்பிடி இப்பிடின்னு பொய் கணக்கு காட்டிடுவாங்க ! எச்சரிக்கை அவசியம் !! பலசரக்கு கடை வைக்கலாம்னு நினைக்கிறவுங்க முதலில் ஆள் பழக்கம் ,அனுசரணை குணம் இதெல்லாம் வேணும் . இங்க தெருவுக்கு ரெண்டு டைலர் கடை இருக்கு அதனால டைலர் கடை வைக்க யோசனை பண்ணி செய்யுறவுங்க .ஒரு நல்ல விஷயம் என்னன்னா மற்ற ஊர்களை விட சிவகாசி நாணயம் உள்ளவர்கள் சில சதவிகிதம் அதிகம் உள்ள ஊர் . சொல்ல மறந்துட்டேன் …சிவகாசி சோத்து முட்டாயிக்கு பேமஸ்

Related posts

Leave a Comment