நான் இருக்கும் போது அதெல்லாம் பண்ணக் கூடாது.. அஸ்வினுக்கு ஆர்டர் போட்ட பாண்டிங்.. ஐபிஎல் ட்விஸ்ட்!

மும்பை : 2019 ஐபிஎல் தொடரில் அஸ்வின் பற்ற வைத்த மன்கட் நெருப்பு இன்னும் கூட அடங்கவில்லை.

கடந்த ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டனாக இருந்த அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அது விளையாட்டு தர்மத்துக்கு எதிரானது என பலரும் கூக்குரல் எழுப்பினர். அது பெரும் சர்ச்சையாக மாறியது. அஸ்வின் செய்தது சரி என மற்றொரு கூட்டம் ஆதரவு தெரிவித்தது.

மன்கட் ரன் அவுட்

மன்கட் ரன் அவுட் மன்கட் ரன் அவுட் என்பது எதிர் முனையில் நிற்கும் பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் பந்தை வீசும் முன்பே தன் கிரீஸை விட்டு வெளியேறும் போது செய்வது. பந்துவீச்சாளர் பந்தை வீசும் முன்பே அந்த பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்யலாம். விதிப்படி அது அவுட் தான்.

ஆனால், மன்கட் செய்யும் முன் எச்சரிப்பது என்பதை எழுதப்படாத விதியாக கிரிக்கெட்டில் பின்பற்றி வருகின்றனர். எத்தனை முறை பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியேறினாலும் வெறும் எச்சரிக்கை மட்டுமே செய்ய வேண்டும் எனவும் சிலர் கூறுவதும் உண்டு.

கோபம் கொண்டனர் அஸ்வின் இந்த விளையாட்டு தர்மத்தை மீறி விட்டதாக பல முன்னாள் வீரர்கள் அப்போது கோபம் கொண்டனர். இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரில் அஸ்வின் பஞ்சாப் அணியில் இருந்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மாறி உள்ளார்.

ரிக்கி பாண்டிங் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆவார். பாண்டிங்கை பொறுத்தவரை மன்கட் செய்வது விளையாட்டு தர்மத்துக்கு எதிரானது என்ற மனநிலையை கொண்டுள்ளார். அவர் இந்த ஆண்டு தன் அணியில் ஆட உள்ள அஸ்வினிடம் இது பற்றி பேசப் போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

செய்யக் கூடாது இந்த ஆண்டு அஸ்வினை பார்த்த உடன் முதல் வேலையாக இதைப் பற்றித் தான் பேசப் போகிறேன் என கூறி உள்ள பாண்டிங், கடந்த சீசனில் அஸ்வின் செய்ததை பார்த்து விட்டு தன் அணி வீரர்களிடம் இது போல நாம் செய்யக் கூடாது என அறிவுரை கூறியதாகவும் தெரிவித்தார்.

அறிவுரை அஸ்வின் சிறந்த பந்துவீச்சாளர், ஐபிஎல்-இல் நீண்ட காலமாக சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஆனாலும், அவரிடம் மன்கட் செய்யக் கூடாது என தான் கூறப் போவதாக தெரிவித்து இருக்கிறார் பாண்டிங். தான் அணியில் இருக்கும் போது அதை செய்யக் கூடாது எனவும் கூறி உள்ளார். அஸ்வின் இந்த அறிவுரையை ஏற்றுக் கொள்வாரா?

கடும் எதிர்ப்பு கடந்த ஆண்டு அஸ்வின் மன்கட் செய்த போது அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சுமார் மூன்று நாளைக்கு அவர் தான் கிரிக்கெட் ஆடும் நாடுகள் அனைத்திலும் டிரென்டிங்கில் இருந்தார். அந்த அளவு கடும் எதிர்ப்பை கூட ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை அஸ்வின்.

சென்ற சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஸ்வின், இந்த முறை டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஒரு வீரராக மட்டுமே இடம் பெற இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அஸ்வின் அதன் பின் எப்போதும் மன்கட் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment