காங். குருசாமியை தொடர்ந்து திமுக மிசா கருப்பையாவுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ1 லட்சம் நிதி உதவி

வறுமையில் வாடிய வத்திராயிருப்பு திமுக பிரமுகர் மிசா கருப்பையாவுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ1 லட்சம் நிதி உதவி வழங்கினார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் துணைத் தலைவர் வாய்சவடால் குருசாமி. அவர் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார்.

Minister Rajendra Balaji gives Rs 1 lakh to DMK Senior leader

அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, குருசாமியின் சிகிச்சைக்காக ரூ1 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதனையடுத்து வத்திராயிருப்பு திமுக பிரமுகர் கருப்பையா வறுமையில் வாடுவதால் அவருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ1 லட்சம் நிதி உதவி வழங்கினார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 81 வயதான கருப்பையா. 1975 ஆம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டு சிறையில் இருந்தவர்.

சிறையில் இருந்த போது அவரது 8 வயது மகன் இறந்த செய்தி கேட்டும் பரோலில் வெளிவர விரும்பாத கொள்கைப் பிடிப்பாளராக இருந்துள்ளார். இந்நிலையில்தான் கருப்பையா வறுமையில் வாடுவது குறித்து அறிந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உதவி செய்திருக்கிறார்.

Related posts

Leave a Comment