சர்க்கரை நோயை விரட்டும் தேன் பழம்

அருப்புக்கோட்டை:உடல் உழைப்பின்மை, உணவு பழக்க வழக்கத்தால் சிறு வயதினர் கூட சர்க்கரை, ரத்த அழுத்த நோய்யால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நோயாளிகள் ஆயுள் முழுவதும் மாத்திரை உட்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் இனிப்பை கட்டாயம் தவிர்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதற்காக பக்க விளைவை ஏற்படுத்தும் ‘சுகர் பிரீ’ மாத்திரைகளை எடுத்து கொள்கின்றனர்.

இயற்கை மூலிகைகளால் குணப்படுத்த கூடிய மருந்துகள் ஏராளமாக உள்ளன. அவற்றின் அருமை பலருக்கு தெரியவில்லை.சர்க்கரை நோயாளிகளுக்காகவே இனிப்புச்சுவை கொண்ட தேன் பழம் அருமருந்தாக உள்ளது. தேன் பழ மரத்தில் உள்ள இலை, பூ, காய், பழம், பட்டை, வேர் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. தேன் பழம் துாக்கலான இனிப்பு சுவையுடன் தேன் சாப்பிட்டது போல் இருக்கும். இதில் வைட்டமின் பி,சி,இ,இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளன.

சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதயம், எலும்பு, பல், புற்று, வயிற்று நோய்களை தீர்க்கும் வல்லமை படைத்தது.ஆத்திபட்டி அருகே திருச்சுழி ரோட்டில் தேன் பழ மரங்கள் வரிசையாக வளர்க்கப்பட்டு வருகிறது. இவை நிழல் தரும் மரமாகவும் பயன்படுகிறது. சிறிய மரமாக அதிக கிளைகளுடன் வளரும் இதன் பழங்கள் சிறியதாக சிவப்பு ,மஞ்சள் நிறத்தில் இருக்கும். இப் பழங்களை பறவைகள் விரும்பி உண்கின்றன. அற்புதங்கள் நிறைந்த தேன் பழ மரங்களை வீடுகள் தோறும் அலங்கார மரமாக வளர்த்து பயன்பெறலாமே.

Related posts

Leave a Comment