சிஎஸ்கே வீரருக்கு கொரோனா வைரஸ்.. மொத்தம் 13 பேருக்கு பாதிப்பு.. கசிந்த தகவல்.. ரசிகர்கள் அதிர்ச்சி

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க துபாயில் முகாமிட்டுள்ளது. அந்த அணி விதிப்படி முதல் வாரம் குவாரன்டைனில் இருந்தது. அப்போது மூன்று முறை கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஒரு வேகப் பந்துவீச்சாளர் மற்றும் 12 உதவியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

துபாய் சென்ற சிஎஸ்கே

துபாய் சென்ற சிஎஸ்கே 2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதற்காக எட்டு ஐபிஎல் அணிகளும் இந்தியாவில் இருந்து கிளம்பி துபாய் மற்றும் அபுதாபியில் முகாமிட்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் துபாயில் ஒரு ஹோட்டலில் முகாமிட்டுள்ளது.

அந்த ஒரு சிஎஸ்கே வேகப் பந்துவீச்சாளர் யார்? என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. வேறு வீரர்கள் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதும் தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் இடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ இதுவரை இது பற்றி விளக்கம் அளிக்கவில்லை.

ஐபிஎல் அதிகாரிகள் சமாளிப்பு ஐரோப்பாவில் கால்பந்து தொடர்கள் தொடங்கிய போது கூட சில அணிகளில் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. ஆனாலும், பின்னர் அவர்கள் உடல்நிலை சீராகி போட்டிகளில் பங்கேற்றார்கள். அதே போல தான் இதுவும் என ஐபிஎல் அதிகாரிகள் சிலர் இதை சமாளித்து கருத்து கூறி வருகின்றனர்.

சிஎஸ்கே அணி துபாய் செல்லும் முன் ஆறு நாட்கள் சென்னையில் தங்கி பயிற்சி முகாமில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னரே துபாய் கிளம்பிச் சென்றது சிஎஸ்கே. அந்த விஷயமும் தற்போது விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது.

Related posts

Leave a Comment