செப்.14ல் கூடுகிறது தமிழக சட்டசபை.. கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடர்.. எம்எல்ஏக்களுக்கு கொரோனா டெஸ்ட்!

செப்.14ல் கூடுகிறது தமிழக சட்டசபை.. கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடர்.. எம்எல்ஏக்களுக்கு கொரோனா டெஸ்ட்!

கொரோனாவிற்கு இடையே டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது.

Tamilnadu assembly session to hold up in Kalaivanar Arangam on Sep 14

இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடரும் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனா காரணமாக இந்த முறை ஜார்ஜ் கோட்டையில் கூட்டம் நடக்காது. மாறாக இந்த முறை செப்.14ம் தேதி கலைவாணர் அரங்கில் கூடுகிறது தமிழக சட்டப் பேரவை கூட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடந்து வருகிறது.

காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்படும். தனி மனித இடைவெளியுடன் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment